தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிப்பது எப்படி என்று அறியலாம்



புகார்கள் அனுப்புவது

1. தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பப்படும் புகார்கள் ஆங்கிலம் அல்லது இந்தியிலோ எட்டவாது அட்டவணையில் கூறப்பட்டுள்ளபடி மாநில மொழியான தமிழிலும் இருத்தல் வேண்டும்.


2. இந்த மொழிகளில் அனுப்படும் புகார்களை ஆணையம் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்.


3. புகார் மனுவுக்கு கட்டணம் கிடையாது.


4. புகாரில் முழுமையான விவரத்தை தெரிவித்தல் வேண்டும்.


5. ஆணையம் புகார் சம்பந்தமான கூடுதல் தகவல்களை கேட்டுப் பெறலாம்.


6.புகார்களை பிரமாணப் பத்திரம் (அபிடாவிட்) மூலம் அளிக்குமறு சொல்லலாம்.


7. தந்தி மற்றும் தொலை நகல் மூலம் அனுப்பும் புகார்களை சற்று எச்சரிக்கையுடன் ஆணையம் ஏற்றுக்கொள்கின்றது.


புகார்மனுவில் குறிப்பிட வேண்டியது


1. பெயர்இருப்பிட முகவரி


2. புகார் எழுந்த நிகழ்விடம்


3. முகவரிநாள் மற்றும் நிகழ்வின் காலம்


4. மனித உரிமை மீறல்களின் விரிவான/சுறுக்கமான விவரங்கள்


5. எந்த பொது ஊழியர் குறித்து புகார் அல்லது துறையினர் குறித்து புகார்.


6. நீதிமன்றத்தின் முன் நிலுவையில் உள்ளனவா/தீர்ப்பாயம்/வேறு பிற ஆணையங்களில் நிலுவையில் உள்ளனவா?இடர்/ துயர்/பதிலீடு குறித்து வேண்டுவன


குறிப்பு

ஒருவர் மாநில மனித உரிமை அல்லது தேசிய மனித உரிமை ஆணையம் என்று ஏதாவதொரு ஆணையத்தில் புகார் செய்யலாம்.


ஏற்கப்படாத புகார்கள்


1. தெளிவற்ற புகார்.


2. தெளிவற்ற பெயர் இல்லாத புனைப் பெயரில் கொடுக்கப்பட்ட புகார்.


3. மிகச் சிறிய அளவிலான புகார்.


4. பொது ஊழியருக்கு எதிரானல்லாத குற்றச்சாட்டு.


5. சொத்துரிமைகள், ஒப்பந்த கடப்பாடுகள், உரிமையியல் சார்ந்த பிரச்சினைகள்.பணி விடயங்கள் (சர்விஸ் மேட்டர்) சம்பந்தமானப் புகார்.


6. மனித உரிமைகள் மீறுதல் எதனையும் கொண்டிராத குற்றச்சாட்டுகள்.


7. தொழில் அல்லது தொழில் தகராறு சம்பந்தமானப் புகார்.


8. ஆணையத்தின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட புகார்.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்