காவல் நிலையங்களில் நாம் ஒரு புகார் கொடுக்கும் போது அந்த புகாரில் என்னென்ன தகவல் இருக்க வேண்டும்

புகாரில் குறிப்பிட வேண்டிய தகவல்கள்


1. புகார் மனுவில், மனுதாரரின் பெயர், வயது, தந்தையார் அல்லது கணவர் பெயர், முழு முகவரி, தொடர்புக்கான தொலைபேசி எண் ஆகியவை முழுமையாக தரப்பட வேண்டும்.


2. பின்னர் புகார் மனுவை எந்த காவல்நிலையத்தி்ல் பதிவு செய்கிறோமோ அந்த காவல்நிலைய அதிகாரியை பெறுநராக குறிப்பிட வேண்டும்.


3. காவல் நிலையத்தில் பல படி நிலைகளில் அதிகாரிகள் இருந்தாலும், குற்ற நிகழ்வுகளில் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவல்துறை ஆய்வாளர் அல்லது துணை ஆய்வாளர் மட்டுமே அந்த புகாரைப் பரிசீலித்து முதல் தகவல் அறிக்கை தயாரிக்க முடியும்.


4. குற்ற நிகழ்வு நடந்த இடம், நேரம் ஆகியவற்றுடன் குற்ற நிகழ்வு குறித்த முழுமையான விவரங்கள் புகாரில் இடம் பெற வேண்டும்.


5. எதிரி மிகவும் மோசமான வார்த்தைகளில் திட்டியிருந்தால் அதைக் குறிப்பிடுவது நல்லது.


6. அதேபோல கொலை மிரட்டலோ, வேறுவகை மிரட்டலோ விடுத்திருந்தாலும் அதையும் புகாரில் தெரிவிப்பது நல்லது.


7. தாக்குதல் நடந்திருந்தால் அந்தத் தாக்குதல் எவ்வாறு நடந்தது, எந்தப் பொருளால் தாக்குதல் நடந்தது, அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதையும் புகாரில் கூற வேண்டும்.


8. திருட்டு, கொள்ளை போன்றவை நடந்திருந்தால் இழப்புகள் குறித்த முழு விவரங்களும் அளிக்கப்பட வேண்டும்.


 9. நமக்கு முன்பே தெரிந்த நபர்களை அவர்களுடைய பெயர், முகவரியோடு குறிப்பிட வேண்டும். பெயர் தெரியாத, ஆனால் அடையாளம் காட்டக்கூடிய நபர்களை “பெயர் தெரியாத, நேரில் அடையாளம் காட்டக்கூடிய நபர்” என்று தெளிவாகக் குறிப்பிட வேண்டும். முற்றிலும் அடையாளம் தெரியாத நபர் என்றால் அடையாளம் தெரியாத நபர் என்று சொல்லலாம்.

கருத்துகள்